அடேங்கப்பா! என்ன தான் வளைச்சு வளைச்சு பிடித்தாலும் தடுக்க முடியலையே தேர்தல் ஆணையம் வேதனை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கிட்டத்தட்ட 3 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தற்சமயம் நடைபெறவிருக்கிறது.

இந்த தேர்தலில் எப்படியாவது 100 சதவீத வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்று ஆளும் கட்சியான திமுக தீவிர முயற்சியிலிறங்கி வருகிறது.

ஒருபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன, மறுபுறம் தேர்தல் ஆணையமும் பறக்கும் படையை அமைத்து தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தடுக்கும் விதத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை செய்து வருகிறார்கள். இந்த சோதனைகளின் போது முறையான ஆவணங்கள் எதுவுமில்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்கள், உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆவணங்களை சமர்ப்பணம் செய்த பிறகு சம்பந்தப்பட்ட நபர்களிடம் அந்தப் பணம் மற்றும் பொருட்கள் ஒப்படைக்கப்படுகின்றன.

அந்த விதத்தில் சென்ற மாதம் 28ம் தேதி முதல் இந்த மாதம் 10ம் தேதி வரையில் 6.89 கோடி ரூபாய் பணம், 1.37 லட்சம் மதிப்பிலான பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அதோடு 1 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இதுவரையில் 9.28 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.