மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளித்து உத்தரவு!

0
229

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளித்து உத்தரவு!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு, வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4-ம் தேதி நிறைவடைந்தது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நாளையுடன் (பிப்ரவரி 17) தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக வருகிற 19ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது, டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.2.2022 காலை 10 மணி முதல் 19.2.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் மற்றும் அந்த பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசை மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

அதனை தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மேலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு வருகிற 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள வருகிற 22ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Previous articleஅடேங்கப்பா! என்ன தான் வளைச்சு வளைச்சு பிடித்தாலும் தடுக்க முடியலையே தேர்தல் ஆணையம் வேதனை!
Next article‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here