RT PCR பரிசோதனை கட்டாயம் இல்லை; 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் – மத்திய அரசு அறிவிப்பு
6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த முன் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
சில நாட்களிலேயே உலக நாடுகளில் கொரோனா தொற்று, பல அலைகளாக பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஏராளமானோர் உயிரிழந்தனர். கொரோனா நோய் தொற்று சற்று குறைந்திருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.
தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது. இதனையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள், அங்கிருந்து புறப்படும் முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.