RTE விவகாரம்! கையில் எடுத்த எடப்பாடி! தமிழக அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் முதல்வர்!

0
28
Edappadi posted on social media condemning Stalin for putting stickers on our projects
Edappadi posted on social media condemning Stalin for putting stickers on our projects

RTE பற்றி நம்ம எல்லாருக்கும் தெரியும். RTE மூலம் மிகவும் நலிந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெறும் 25 சதவீதம் மட்டுமே பள்ளிக்கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியும். மீதமுள்ள 75 சதவீதம் தொகையை மத்திய மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு கட்டிவிடும்.

கடந்த இரு வருடங்களாக தனியார் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையை அரசு கொடுக்கவில்லை. காரணம் மத்திய அரசு RTEக்கான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. இதனால் இந்த வருடம் RTE அட்மிஷன் இதுவரை ஆரம்பமாகவில்லை. இதனால் ஏழை குழந்தைகளின் தனியார் பள்ளியில் குறைந்த தொகையில் படிக்கும் கனவு இதுவரை நிறைவேறாமல் உள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் தான் RTE கல்வி நிதியை தமிழகத்திக்கு ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் நீதிமன்றம் மத்திய அரசு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று அறிவித்துவிட்டது. மத்திய அரசு சார்பாக இதுவரை இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக கட்சி பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உங்களுக்கும், மத்திய அரசுக்கும் இருக்கும் பிரச்சனையை இதில் கொண்டு வரவேண்டாம். எங்கள் ஆட்சி காலத்தில் கூட கல்வி நிதி வராதபோது நாங்கள் தமிழக அரசு நிதியில் இருந்து பணத்தை செலுத்தி இந்த திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினோம். பிள்ளைகளின் கல்வி மற்றும் படிப்பில் விளையாடாதீர்கள், கூடிய விரைவில் இந்த RTE திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு ஆரம்பிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார்.

Previous articleஇப்போவே அதிக தொகுதி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? பதற்றத்தில் திமுக!
Next articleஇந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பாக்கல! முத்தமழை பாடல் வீடியோ வெளியீட்டால் அதிர்ந்த ரசிகர்கள்!