திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு

0
232
Rudra Thandavam Trailer
Rudra Thandavam Trailer

திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.அந்த வகையில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இந்த படத்திலும் திரௌபதி கதாநாயகனான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம்மேனன்,நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே திரௌபதி படத்தில் நாடக காதல் என்ற தமிழ் சினிமாவில் யாருமே தொட தயங்கிய கான்செப்டை எடுத்த மோகன் ருத்ர தாண்டவம் திரைப்படத்திலும் அதே மாதிரி ஒரு வித்தியாசமான கதையை படமாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அந்த வகையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் தான் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது

ட்ரெய்லரில் காவல் துறை அதிகாரியாக வரும் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் போதை பொருள் விவகாரம் குறித்து அளிக்கும் பேட்டியானது படத்தில் போதை பொருள் கடத்தல் சம்பவத்தை பற்றி காட்சிகள் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.”தருமபுரி காரன் நமக்கெல்லாம் அடங்கி போகமாட்டான்” என டயலாக் வைத்திருப்பதிலிருந்து மீண்டும் சாதிய கதையாகவும்,லாக் அப் மரணம் குறித்த காட்சி இருப்பதால் தமிழகத்தில் நடக்கும் லாக் அப் மரணங்களின் பின்னணி குறித்த கதையாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக யூகிக்க முடிகிறது.

அதே நேரத்தில் கிறிஸ்துவராக மதம் மாறினால் PCR சட்டம் செல்லாது என்ற வசனம் இருப்பதால் இது PCR என்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகவும் தோன்றுகிறது.ட்ரெய்லர் காட்சியை பார்க்கும்போது கௌதம்மேனன் மற்றும் ராதாரவி உள்ளிட்ட பிரபலங்களை இயக்குனர் சரியாக பயன்படுத்தி அடுத்து ஒரு தரமான சம்பவத்தை தமிழ் ரசிகர்களுக்கு தரவுள்ளார் என்பது உறுதியாகிறது.

Previous articleமக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!
Next articleதுணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!