ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை!! 3வது டி-20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

Photo of author

By Rupa

ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை!! 3வது டி-20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு அங்கே 5 டி-20 தொடர்களை விளையாடிக்கொண்டிருக்கிறது. அதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது அதன் பின் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது.

அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் ஒபெனிங் செய்தனர். தொடக்கத்திலே அதிரடி காட்ட ஆரம்பித்தார் ஜெய்ஸ்வால் அதன் பின் கில் ஒருபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து பவர் பிளேவில் 55 ரன்களை குவித்தனர்.

ஜிம்பாப்வே அணி நன்றாக பந்து வீசியது ஆனால் கைக்கு வந்த கேட்ச்களை கோட்டைவிட்டதால் இருவரும் அதை பயன்படுத்தி ரன்களை குவித்தனர். அதன் பின் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்ததாக முதல் இருபோட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா இம்முறை மூன்றாவதாக களமிறங்கினார் ஆனால் அது அவருக்கு சரியாக அமையாததால் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின் ருதுராஜ் அவர்கள் களமிறங்க ஜிம்பாப்வே பவுலர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். மற்றொரு புறம் கில் அவர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அதன் பின் ருதுராஜ் அதிரடியாக விளையாடி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 182 ரன்களை எடுத்தது இந்திய அணி

அதன் பின் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்கத்தில் 3 விக்கெட்களை பறிகொடுத்தாலும் அதன் பின் டியான் மயர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார் அவருடன் ஜோடி சேர்ந்து க்ளைவ் மடண்டேவும் சிறப்பாக விளையாடினார். அதன் பின் க்ளைவ் மடண்டே 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க கடைசியில் 20 ஓவர்களுக்கு 159 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது ஜிம்பாப்வே அணி. டியான் மயர்ஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் 65 ரன்களை குவித்தார்.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.