என் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க.. விரக்தியாக பேசிய ரகுமான்!

0
143
#image_title

என் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க… விரக்தியாக பேசிய ரகுமான்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர் தமிழில் ‘புதுபுது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனையடுத்து, ‘பட்டிகாட்டான்’ உட்பட பல நடிங்களில் நடித்தார். மிக குறுகிய காலத்திலேயே இவர் ரொம்ப பிரபலமாகிவிட்டார். மேலும், ‘பில்லா 2’, ‘சிங்கம் 2’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

இவர் கிராமத்து கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘சங்கமம்’. இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ரகுமானுக்கு ஜோடியாக நடிகை விந்தியா நடித்திருந்தார். இப்படத்தில் மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்தனர். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம் பெற்ற ‘மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்’ பாடல் பட்டி, தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டடித்தது.

ஒரு சேனலுக்கு நடிகர் ரகுமான் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில்,

நான் சங்கமம் படத்தில் நடித்த கொஞ்ச நாளிலேயே தொலைக்காட்சியில் வந்தது. இதனால் நான் ரொம்ப வேதனை அடைந்தேன்.

இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் கேட்டதற்கு இருவரும் அதை பற்றி எதுவுமே சொல்லவில்லை. இப்படத்திற்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தேன். எனக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்த படம் இது. இப்படம் முடியும்வரை வேறு எந்த படத்திற்கு நான் கால்ஷீட்  தரல. அப்படி கடினமாக உழைத்து நடித்த படம் தொலைக்காட்சியில் வந்தது எனக்கு ரொம்ப வேதனை கொடுத்தது என்று பேசினார்.

Previous articleதேடி வந்த சூப்பர் ஹிட் அஜித் பட வாய்ப்பு – தவறவிட்டதை நினைத்து புலம்பிய சங்கீதா : காரணம் இதுதானாம்!
Next articleபட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்.. மனம் திறந்த மன்சூர் அலிகான்!