ரூபாய் மதிப்பு உயர்வு!

Photo of author

By Parthipan K

அந்நிய செலாவணி சந்தையில் வாரத்தின் கடைசி நாளாக வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு காசு உயர்ந்தது.

இதுகுறித்து அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறியதாவது: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, அமெரிக்கா-சீனா இடையே அதிகரித்துவரும் பதற்றம் ஆகியவை அந்நிய செலாவணி சந்தையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது.

மந்தமான வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 75.04 என்ற அளவில் சரிவுடன் காணப்பட்டது. பின்னர் சரிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டது.

அந்நிய செலாவணி சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தை காட்டிலும் ஒரு காசு உயர்ந்து 74.93 இல் நிலைபெற்றது.

அந்நிய முதலீடு:  பங்குச்சந்தை தரவுகளின்படி, அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் நிகர அளவில் ரூ.637.43 கோடியை முதலீடு செய்துள்ளது.

கச்சா எண்ணெய்: சர்வதேச சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.42 சதவீதம் குறைந்து 44.60 டாலராக இருந்தது.