நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!

Photo of author

By Rupa

நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!

கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்று ஆரம்ப காலம் சீனாவின் வுஹான் பகுதியில் காணப்பட்டது.நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த தோற்று பரவியது.முதல் அலையிலேயே அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.இரண்டாம் அலையில் இந்தியா அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.அனைத்து நாடுகளுக்கும் தற்போது வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால்,இந்த தொற்று செயற்கை முறையில் உருவானதா அல்லது இயற்கையாகவே உருவாகி உள்ளதா என்பதுதான்.

அனைத்து நாடுகளும் சீனாவிடம் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி தான் வருகிறது.ஆனால் சீனா அரசு இது இயற்கையான முறையில் உருவானது தான் என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.மக்கள் பலர் இத் தொற்றால் தங்களின் உறவுகளை இழந்து நிர்கதியாக உள்ளனர்.அரசாங்கம் இதனை சரிக்கட்ட பல நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு செய்து தான் வருகிறது.அதேபோல் மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவில்லை.அதனையடுத்து பல உயிர் சேதங்கள் நடந்த பிறகு விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் தடுப்பூசி போட முன்வந்துள்ளனர்.ஆனால்,நம் தமிழ்நாட்டிலும் கடுமையாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஒன்றிய அரசிடம் பல முறை தமிழக அரசு கோரிக்கை விடுத்தும் நம் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என ரஷ்ய தூதர் தகவல் அளித்துள்ளார்.மேலும் வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு வருவது குறித்து ரஷ்யா மற்றும் இந்தியா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவு என்பது அந்த வானத்தை போல என கூறுகின்றனர்.தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்படுத்துவதோடு அது தொடர்பான ஒத்துழைப்பு அதிகரிப்பதும் பெருமை அளிக்கும் கூடிய விஷயமாக உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பு மருந்து விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.