உக்ரைனை கைப்பற்ற முழுமூச்சில் இறங்கிய ரஷ்யா?

Photo of author

By Sakthi

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா எந்த சமயத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், போரைத் தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபை வைத்த வேண்டுகோள் ஒருபுறமிருக்க உக்ரைனின் இராணுவ நடவடிக்கையை கைவிட அந்த நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்று விளாடிமிர் புட்டின் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா படைகளுக்கு விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கின்றன.

இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது. ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்கு நுழைவதற்கான அறிகுறியாக கீவ் நகரில் வெடிகுண்டு சத்தம் ஒன்றும் கேட்டிருக்கிறது.

இதனடிப்படையில், மறியுபோல் என்ற கிழக்கு துறைமுக நகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டிருக்கின்றனர். உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரமாக இறங்கி வருவதாக சொல்லப்படுகிறது.