உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்,இதில் இருபதுக்கும் மேற்பட்டார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!
உக்ரைனின் மத்திய நகரான க்ரெமென்சுக்கில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகத்தில் ரஷிய ஏவுகணை நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தார்கள் .இத்தாக்குதலில் எடுக்கப்பட்ட வீடியோவை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது உரையில் காட்டினார்.இதுதொடர்பாக அவர் தனது உரையில் கூறும்போது மத்திய நகரமான கிரெமென்சுக் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 59 பேர் காயமடைந்தார்கள் எனவும்,அமைதியான நகரத்தில் வழக்கமாக செயல்பட்டுக்கொண்டிருந்த வணிக வளாகத்தில் முடிந்தவரை பலரைக் கொல்ல ரஷிய ராணுவத்தினர் திட்டமிட்டனர்.என்று ஜெலென்ஸ்கி வருத்தத்துடன் கூறினார்.அப்போது அந்த வணிக வளாகத்தில் குறிப்பிட்டு பார்த்தால் 1000 பேர் வரையில் இருந்திருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியது .
ஏவுகணை தாக்குதலால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். அருகில் உள்ள வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடங்களில் தஞ்சம் புகுந்தார்கள். கட்டிடத்தின் ஒரு பகுதி ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் உருவானது. உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.ரஷியா ஏவுகணை தாக்குதல் நடந்த பிராந்தியத்தில் நேற்று துக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.
இதற்கிடையே உக்ரைனுக்கு உதவிகளைத் தொடர்வது சார்பாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளார்கள். இந்த தாக்குதல்களை தொடர்ந்து உக்ரைன் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் இதுபற்றி ஆலோசனை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் லிசிசான்ஸ்க் நகரை தெற்கில் இருந்து துண்டிக்க ரஷிய படைகள் முயற்சி செய்து வருகின்றன. இதை லுஹான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடாய் முகநூலில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.