திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன?

0
100
Russia suddenly stopped the war! What is the background plan?
Russia suddenly stopped the war! What is the background plan?

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன?

ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி அதனை தடுப்பதற்கும் இந்தப் போர் நடைபெறுகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தால் இதர நாடுகளின் ஆதரவைப் பெற்று ரஷ்யாவை தாக்க நேரிடும் என்பதால் தற்பொழுது போர் நடந்து வருகிறது.

தற்போது வரை 190 க்கும் மேலான மக்கள் உக்ரைனில் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் இறுதியிலேயே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வியாழன் அன்று முதல் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதில் குறிப்பாக ரஷ்யாவின் தலை நகரையே முதலில் தாக்கியது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.நமது இந்தியாவில் மருத்துவம் படிக்க இயலாத மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வது வழக்கம். அவ்வாறு சென்ற மாணவர்கள் தற்போது இந்த இரு நாடுகளின் இடையே ஏற்படும் போரில் சிக்கி தவித்து வருகின்றனர். அவ்வாறு படிக்கச் சென்ற மாணவர்களில் மீட்கும் பணியில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி ஒன்பது நாட்கள் கடந்த நிலையில் பத்தாவது நாளான இன்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. உக்ரைனில் உள்ள மக்களின் நலன் கருதி போர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு கால அவகாசம் கொடுத்து தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளதாக ரஷ்யா அதிபர் கூறியுள்ளார்.