கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னேறியது ரஷ்யா

0
208

உலகிலேயே அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருந்த ரஷ்யா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்பொழுது வரை இரண்டாவது இடத்தில் இருந்த சவுதி அரேபியா மூன்றாவது இடத்திற்கு சென்றது. இதனால் உலகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு பட்டியல் இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.உண்மையில் உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களில் எண்ணையை மையமாக வைத்தே தற்பொழுது வரை நடைபெற்று வந்திருக்கிறது. எண்ணை வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடு, உலகில் வெற்றிகரமான நாடு எனவும் கருதப்படுகிறது .மேலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் பணக்கார நாடு என்ற பெயரையும் பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில் எண்ணைய் வணிகத்தில் ரஷ்யா தன்னை அதி வலிமை பொருந்திய நாடாக மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்த ரஷ்யா தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது மட்டுமல்லாமல் சவுதி அரேபியாவை இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.

கடந்த ஜூன் மாதம் ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 8 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்து வந்ததாகவும் ,அதே சவுதி அரேபியாவில் ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் பீப்பாய் என்ற அளவிலே உற்பத்தி செய்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் அமெரிக்க நாடு நாளொன்றுக்கு சுமார் 150 மில்லியன் ரூபாய்களை உற்பத்தி செய்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் ,சவுதி அரேபியாவுக்கும் கச்சா எண்ணெயில் உடனான போர் தொடங்கியது. ரஷ்யா எண்ணெய் உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கூறிவந்த நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தினால் மட்டுமே சர்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியும் என சவுதி அரேபியா கூறியது. மேலும் ரஷ்யாவுக்கு கச்சா எண்ணையை குறித்து சில நிம்மதியையும் சவுதி அரேபியா விதித்தது. ஆனால் ரஷ்யா அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து விட்டு அதற்கு ஈடாக எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் எண்ணெய் விலையை தள்ளுபடி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleசரிந்தது தங்கத்தின் விலை! மக்கள் மகிழ்ச்சி! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Next articleசின்சினாட்டி டென்னிஸ் நட்சத்திர வீரர்கள் அதிர்ச்சி தோல்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here