உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

Photo of author

By Sakthi

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

Sakthi

Updated on:

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!
உக்ரைன் நாட்டில் மருத்துவமனை மீது ரஷ்யா நாடு ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது இரஷ்ய நாட்டின் போர்படைகள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியின் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மருத்துவமனையின் கட்டிடம் இடிந்து விழுந்து தீ பிடித்து எரிந்தது. மூன்று மாடி கொண்ட அந்த கட்டிடத்தின்.மேல் தளம் முற்றிலும் சேதம் அடைந்தது. மருத்துவமனை மீது  நடத்தப்பட்ட இந்த ஏவுகனை தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கிவ், டினிப்ரோ மற்றும் கிழக்குப் பகுதிகளில் இரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யாவின் 10 ஏவுகனைகள், 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஆகியவற்றை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.