இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ரஷ்ய அதிபர்! எந்த காரணத்திற்கு தெரியுமா?
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும்.பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும்.ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது.
ஐ.நா.பாதுகாப்பு அவையில் இதுவரை எந்த இந்திய பிரதமரும் உரை நிகழ்த்தியதில்லை.இதனிடையே கடந்த திங்களன்று ஐ.நா.பாதுகாப்பு அவையில் கடல்சார் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.இதில் காணொளி மூலம் இந்திய பிரதமர் முதன் முதலாக இந்தியா சார்பில் உரையாற்றினார்.இதில் அவர் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்கான தடைகளை நீக்க ஐந்து அம்ச திட்டம் ஒன்றை முன்மொழிந்தார்.
கடல்சார் வர்த்தகமானது இந்தியாவின் முக்கிய வணிகமாக இருக்கிறது.மேலும் அவர் கடல்சார்பான ஆபத்துக்களான கடற்கொள்ளை,இயற்கை பேரிடர்கள் போன்றவற்றை தடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.கடல்சார் வர்த்தகத்திற்கான தடைகளை நீக்க வேண்டும் எனவும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.ஐ.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இருக்கும் இந்தியாவிற்கு இந்த மாதத்தில்(ஆகஸ்ட்) இருந்து ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவிற்கு கிடைத்த பெரும் கௌரவமாக கருதப்படுகிறது.மேலும் ஐ.நா. கடல்சார் பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடல்சார் பாதுகாப்பு பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரின் உரையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான ரஷ்யா கடல்சார் பாதுகாப்பிற்கான சர்வதேச சட்ட ஒழுங்கை உறுதி செய்ய பெரிய அளவில் பங்களிப்பதாகவும் கூறினார்.