கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி உக்ரைன் மீது அண்டை நாடான ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது. அந்த போர் தற்போது 65 நாட்கள் கடந்து நீடித்து வருகிறது இந்த போர் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கிறார்கள்.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தனர். மேலும் ஐநா சபையின் சார்பாகவும் இந்தப் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதோடு போப் ஆண்டவரும் ரஷ்யாவிற்கு நேரடியாக சென்று போர் தொடர்பாக தன்னுடைய கவலையை தெரிவித்தார்.ஆனாலும் ரஷ்யா தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சி செய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியையே சந்தித்தனர். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதன் காரணமாக, போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தப் போரை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. அதேசமயம் உக்ரைனுக்கு அந்த நாடு ஆயுத ரீதியில் உதவி புரிந்து வருகிறது.
இதை சற்று உற்று நோக்கினால் அமெரிக்காவின் எண்ணம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதா? அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான போரை வைத்து அரசியல் செய்வதா? என்ற சந்தேகம் எழுகிறது.
இதற்கு நடுவில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப்படைகள் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக டான்மார்க், ஹார்சன் போன்ற பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தின் தீவிர தாக்குதல் காரணமாக, அந்தப் பகுதிகள் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது உக்ரைனின் ஹார்சன் மாகாணத்தில் ரூபேள் பணம் அதிகாரப்பூர்வமான பணமாக அறிமுகப்படுத்தப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக போர் ஆரம்பித்த போது உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றுவது நோக்கமல்ல உக்ரைனில் இராணுவ பலத்தை அழிப்பது மட்டுமே தன்னுடைய நோக்கம் என்று ரஷ்யா தெரிவித்திருந்த நிலையில், தற்சமயம் கைப்பற்றிய பகுதிகளில் தங்களுடைய நாட்டு பணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ரஷ்யா. இதன் மூலமாக போரில் கைப்பற்றிய உக்ரைனின் பகுதிகளை முழுவதும் தங்களுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.