எச்சரிக்கை செய்த ரஷ்ய போர்க் கப்பல்! இறுதி நிமிடம் வரை உறுதியுடன் நின்ற 13 உக்ரைன் ராணுவ வீரர்கள்!

0
171

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவியது இந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னுடைய ராணுவ படைகளை குவித்திருந்தது.

இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது, மேலும் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் ஆகவே உக்ரேனில் இருக்கின்ற அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்பையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அந்த நாட்டின் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதல் காரணமாக, அந்த நாடு நிலைகுலைந்து போனது.

பல முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படை இறுதியாக உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திலும் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது.

அதோடு ஐநா சபை ரஷ்யாவிடம் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் என்று கேட்டுக்கொண்டும் அதற்கு செவிசாய்க்க மறுத்து ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் மிக துள்ளிய தாக்குதலை 3வது நாளாக நடத்தி வருகிறது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என்று மும்முனைத் தாக்குதல்களை நடத்துவதால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்திருக்கின்றன.

மேலும் உக்ரைன் நாட்டு ராணுவம் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷ்யப் படைகள் அந்த நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கருங்கடல் பகுதியிலுள்ள உக்ரேனின் பாம்பு தீவில் உக்ரேன் நாட்டு ராணுவ வீரர்கள் 13பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று உக்ரைன் வீரர்களை சரணடைய வேண்டும் என்று கூறியிருக்கிறது.

அதாவது ரஷ்ய போர்க் கப்பலின் கேப்டன் தீவிலுள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்தார். இதுகுறித்து ஆடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஆடியோவில் ரஷ்ய போர்க் கப்பல் கேப்டன் தெரிவிக்கும்போது இது ரஷ்ய போர்க் கப்பல் உங்களுடைய வீரர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் இல்லையெனில் உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு அந்த தீவில் பணிபுரிந்து கொண்டிருந்த 13 உக்ரைன் ராணுவ வீரர்களின் தளபதி பதில் வழங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் தெரிவிக்கும் போது சரி இதுதான் முடிவு என தெரிவித்தார்.

அதாவது, அவர் ரஷ்ய போர் கப்பல் மற்றும் அதன் படைவீரர்கள், மேலும் தளபதியையும் கெட்ட வார்த்தையில் திட்டியதாக சொல்லப்படுகிறது. அதோடு சரணடையவும் மறுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து தீவிலிருந்து உக்ரேன் பாதுகாப்புப் படையினர் மீது ரஷ்ய போர்க் கப்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 13 பேரும் வீரமரணமடைந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Previous articleராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!
Next articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு