மதுரைக்காரன் to தருமபுரிக்காரன் – நூற்றாண்டு திரை வரலாற்றை மாற்றிய ருத்ர தாண்டவம்! உற்சாகத்தில் வட தமிழக மக்கள்
நூற்றாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் மதுரை மண்ணுக்கு மிக மிகப்பெரிய பெருமை இருக்கிறது. அதற்கு காரணம் தொடர்ந்து மதுரை மண்ணில் உள்ள வீரத்தையும், அந்த பகுதிகளை சார்ந்த சமுதாயத்தையும் மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் வெற்றி தான்.
இதற்கு முக்கியமாக தொடர்ந்து தென் தமிழகத்திலிருந்து தமிழ் திரை உலகிற்கு வந்த இயக்குனர்களும், நடிகர்களும் மிக முக்கிய காரணம். தமிழ் சினிமாவின் வரலாற்றில் மதுரை மண்ணில் ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடி மகிழ்வர் மதுரை மக்கள். காலப்போக்கிலும் இது மாறவில்லை.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் மதுரை மண்ணிற்கும், மண்ணை சார்ந்த சமுதாயத்தினர் கொண்ட வீரத்தையும் இன்றளவும் தமிழ் திரையுலகில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு இமேஜை தமிழக மக்களிடம் தென் தமிழகத்தை சேர்ந்த இயக்குனர்களும் நடிகர்களும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
ஆனால் வட தமிழகத்தை சேர்ந்த மண்ணை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் பெருமைப்படும் வகையில் கொண்டாடப்படவில்லை.இயக்குனர் தங்கர்பச்சான் அவருடைய சில படங்களில் வட தமிழகத்தை காட்சி படுத்தியிருந்தாலும் மக்கள் மனதில் பதியும் அளவிற்கு இது குறித்து வசனம் எதையும் வைக்கவில்லை.
அந்த வகையில் நம்ம ஊரும்,மண்ணின் பெருமையும் திரைப்படத்தில் வருமா? என்பது வட தமிழக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகவே இருந்தது.ஆனால் தொடர்ந்து மதுரைக்காரன்,கோயம்புத்தூர்காரன், தூத்துக்குடிகாரன், திருநெல்வேலிகாரன் இப்படித்தான் காலம் காலமாக தமிழ் திரையுலகில் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியாகிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் டிரெய்லர் இவை அனைத்தையும் மாற்றி விட்டது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எவ்வித விளம்பர புரோமோஷன் இல்லாமலும் கிட்டத்தட்ட 43 லட்சம் பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
திரௌபதி இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த அடுத்த படமான் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் டிரெய்லரை யூ டுயூப் பக்கத்தில் தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.
வரலாற்றை மாற்றிய வசனம்:
இந்த டிரெய்லரில் வரும் ஒரு காட்சியில் ‘ஸ்டேஷனுக்கு வந்த இன்ஸ்பெக்டர் யார்? என்று கௌதம் மேனன் கேட்கும்போது, பெயர் ருத்ர பிரபாகரன் என்று எதிர் தரப்பில் சொல்ல ஆள் எப்படி என கௌதம்மேனன் கேட்க ‘தர்மபுரிகாரன்’ நமக்கெல்லாம் கட்டுப்பட மாட்டான் வில்லங்கமான ஆளா இருக்கான் தலைவரே” என்று மீண்டும் பதில் வரும்.இந்த வசனம் வட தமிழக மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ட்ரெய்லரை உலக அளவில் கொண்டு சென்றது.
இந்த வசனத்திற்கு இவ்வளவு பெரிய எழுச்சி பெறுவதற்கு முக்கிய காரணம் வட தமிழகத்தை சேர்ந்த ஒரு மாவட்டத்தை மிகைப்படுத்தி பேசியதுதான் என்று கூறப்படுகிறது.போலி PCR வழக்கு மற்றும் மதமாற்ற பிரச்சனை குறித்து இந்த படத்தில் இருந்தாலும் இந்த வசனமும் வைரலாகி வருகிறது. காலங்காலமாக மதுரை,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளையும் ,அங்கு வாழும் சமூகத்தினரையும் மட்டுமே திரைப்படங்களில் மிகைப்படுத்தி காட்சிபடுத்தி வந்தனர்.
இந்நிலையில் வட மாவட்டங்களில் ஒன்றான,அதுவும் தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் தருமபுரியை குறிப்பிட்டு வசனம் வைத்துள்ளது கடந்த கால வரலாற்றை மாற்றியுள்ளது.
திரௌபதி படத்தில் யாருமே சொல்ல தயங்கிய நாடக காதல் பிரச்சனையை உலகிற்கு எடுத்து காட்டி தமிழ் திரையுலகிலகிற்கு இயக்குனர் மோகன் ஒரு மாற்றத்தை கொடுத்தார்.அதே போல அவரின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் திரைபடத்தில் மதமாற்றம் மற்றும் போலி PCR வழக்குகள் என மீண்டும் யாருமே பேசாத பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.இதனுடன் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த தென் தமிழக அடையாளத்தை மாற்றி வட தமிழக சிறப்புகளையும் படத்தில் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த “மதுரைக்காரன்” வரலாற்றை ருத்ர தாண்டவத்தின் “தருமபுரிக்காரன்” வசனம் மாற்றியுள்ளது வட தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.