CRICKET: இந்திய அணி வீரர்களான கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் ஆஸ்திரேலியா சென்று இந்திய ஏ அணியில் இணைய உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் மற்றும் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் ஆகிய இருவரும் நாளை ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சேறு ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் இந்தியா ஏ இணைய பிசிசிஐ அறிவுரித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்றது.
இந்த தொடரின் முதல் போட்டியில் கே எல் ராகுல் இடம்பெற்றிருந்தார் அதன் பின் இவரது ஆட்டம் காரணமாக இவர் மீதம் இருந்த 2 போட்டிகளில் விளையாடவில்லை. இவரை தொடர்ந்து துருவ் ஜூரல் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக அணியில் விளையாடினார் அதன் பின் விளையாடவில்லை.
நியூசிலாந்து போட்டி முடிவுற்ற நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த காரணத்தால் இந்த ஆஸ்திரேலியா தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதனால் இவர்கள் இருவரும் சென்று அந்த அணியில் விளையாடினால் இவர்களின் ஆட்டம் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக இருக்கும் என கருதி நாளை ஆஸ்திரேலியா அனுப்ப திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.