பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

0
155

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை குடும்பத்தோடு வருமாறு நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளருமான ரித்விகா அழைப்பு விடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நடிகை ரித்விகா நடித்த ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தினேஷ் மற்றும் ரித்விகா நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ திரையரங்கில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த ரித்விகா, அந்த காட்சிக்கு முழுக்க முழுக்க பிக்பாஸ் சீசன் 3 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பெரும்பாலான பிக்பாஸ் போட்டியாளர்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்தாஜ், சேரன், ஆர்த்தி, ஜனனி ஐயர், சென்றாயன், ரம்யா, உள்பட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களின் போட்டியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த காட்சியில் கலந்து கொண்டனர்.

Previous articleதங்கம் வெள்ளி நிலவரம்?
Next articleதிருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது