கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம்! சற்றுமுன் வெளியான தகவல்

Photo of author

By Anand

பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இது அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகம் முழுவதும் பிராத்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து விட்டார் என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். அதாவது இன்று காலை அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு தற்போதுள்ள நுரையீரல் சம்பந்தான பிரச்சனை சரியானதும் விரைவில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.