தன்னைவிட வயதில் சிறியவராக இருக்கும் சினேகன் எழுதிய பாடலை தன்னால் பாட முடியவில்லை என்று மனம் உடைந்து சினேகன் அவர்களுக்கு கால் செய்து தன் மன வேதனையை பகிர்ந்து கொண்ட பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள்.
புத்தம் புது பூவே என்ற படத்திற்கு பாடல் வரிகள் எழுதியதன் மூலம் 1997 ஆம் ஆண்டு கவிஞராக தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் சினேகன். ஆனால் இந்த படம் சினிமா துறையில் வெளிவராமல் போய்விட்டது. எனினும் விடாமுயற்சியாக சினேகன் அவர்கள் தம்பி ராமையா இயக்கத்தில் 2000 ஆண்டில் உருவாக்கப்பட்ட மனுநீதி என்ற படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். மேலும் அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு தன்னுடைய கவிதை வரிகளால் பாடல்களை எழுதிக் கொடுத்தவர் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், சொக்க தங்கம், சாமி, மன்மதன், கழுகு உள்ளிட்ட படங்களில் கவிஞர் சினேகன் எழுதிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பாடல் ஆசிரியராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சினேகன், பிக்பாஸ் முதல் சீசனில், போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சினேகன் மேலும் பிரபலமானார்.
யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சினேகன், கோமாளி, பூமி, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சினேகன், கடைசியாக அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் நள்ளிரவில் திடீரென பாடலாசிரியர் சினேகன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் நான் பாலு பேசுகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார். அதற்கு சினேகன் அவர்கள் பாலு வா என்று கேட்க, நான் எஸ் பி பாலசுப்ரமணியம் பேசுகிறேன். நீங்கள் மிகவும் நல்ல கவிஞர். உங்களுடைய பாடல்வரிகளை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மனதே கனத்துப் போய்விட்டது. உங்களுடைய பாடல் வரிகளை என்னால் பாட முடியவில்லை என்ற இயக்கம் என்னிடத்தில் இருக்கிறது என்று அவர் கால் மணி நேரமாக தன்னுடைய மனவேதனைகளை சினேகன் இடம் பகிர்ந்து கொண்டார் என்று சினேகன் பகிர்ந்திருக்கிறார்.