எஸ் பி முத்துராமன் தனக்கு இது வேண்டும் என்று கேட்க.. தலையில் அடித்துக் கொண்ட எம்ஜிஆர்!!

0
69
S P Muthuraman asked that he wanted this.. MGR hit his head!!
S P Muthuraman asked that he wanted this.. MGR hit his head!!

தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் தனித்து வாழ்ந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள், மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதன் பிற்காலங்களில் திரைத்துறையில் பல படங்களில் சிறு சிறு வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தின் மூலம் துணை நடிகராக திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தன்னுடைய திறமையினால் இரண்டாவது கதாநாயகனாக வளர்ந்தார்.

தன்னுடைய சிறு வயதிலிருந்தே மிகவும் ஏழ்மையில் வாழ்ந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பழக்கத்தினை தீவிரமாக கடைப்பிடித்தார். இவர் பெரிதும் உதவும் குணம் கொண்டவராக திகழ்ந்தார் என்றும் பசி என்று வருபவர் மட்டும் இன்றி தன்னை பார்க்க வருபவர்களுக்கும் உணவு பரிமாறி தான் அனுப்பி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் படங்களை வெற்றி இல்லாமல் போக, அச்சமயத்தில் கூட துவண்டு போகாமல் தன்னுடைய படத்தை தானே தயாரித்து தானே இயக்கவும் செய்தார். அப்படி வெளிவந்த படம் தான் “நாடோடி மன்னன்”. இந்த படம் ரசிகர்களிடையேயும் திரைத்துறையிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதிலிருந்து தன்னுடைய படத்திற்கு தேவையான அனைத்தையும் தானே செய்து கொள்ளும் அளவு உயர்ந்து நின்றார் எம்ஜிஆர்.

இதனைத் தொடர்ந்து திரைத்துறை மட்டும் இன்றி அரசியலிலும் ஈடுபட்ட இவர், ஒரு காலகட்டத்தில் திமுகவிலிருந்து விலகி தனக்கென ஒரு கட்சியாக அதிமுகவை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சர் பதவியையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சென்று கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில், ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பினை காண சென்றுள்ளார். முதலமைச்சர் எம்ஜிஆர் வந்திருக்கிறார் என்று அனைவரும் வந்து அவரை நலம் விசாரித்தனர். இவரும் இன்முகத்தோடு அனைவரையும் அன்புடன் வரவேற்று பேசியுள்ளார்.

அப்பொழுது ஏவிஎம் நிறுவனத்தின் துணை இயக்குனர் அங்கு வந்துள்ளார். அவரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று எம்ஜிஆர் அவர்கள் வினாவி இருக்கிறார். இதனை சரியாக காதில் வாங்கிக் கொள்ளாத துணை இயக்குனர் மீண்டும் என்ன சொன்னீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு எம்ஜிஆர் அவர்களும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன் என்று கூறியிருக்கிறார். உடனே எனக்கு உங்கள் வீட்டில் சமைக்கும் “சிக்கன் நெய் ரோஸ்ட்” வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சிரித்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்ட எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள், ஒவ்வொருவரும் ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க நீ நெய் ரோஸ்டை போய் கேட்கிறாயே என்று கூறியிருக்கிறார். மேலும் அடுத்த நாளே எம்ஜிஆர் அவர்களது வீட்டில் இருந்து ஏவிஎம் துணை இயக்குனருக்கு சிக்கன் நெய் ரோஸ்ட் ஹாட் கேரியரில் பரிமாறப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் ஏவிஎம் நிறுவனத்தின் துணை இயக்குனர் எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் மக்களிடம் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஜிப்மர் ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.33,000/- பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleUGC யின் புதிய அறிவிப்பு!! புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்ட நெட் தகுதி தேர்வு!!