ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா?

Photo of author

By Rupa

ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா?

காலகாலமாகவே ஆடியில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று கூறுவார்கள். இதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொள்வார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பன் ஆவார்.அந்நேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும்.அதனால் காலம் காலமாக ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வந்தனர்.

அதனால் தான் புதிதாக திருமணம் ஆனவர்கள் ஆடி மாதம்  அன்று ஒன்று சேர விடுவதில்லை.ஆனால் இதெல்லாம் முன்னோர்கள் சொன்ன ஒரு சாக்கு மட்டும் தான். உண்மையான காரணம் இது கிடையாது.ஆடி மாதத்தில் ஒன்று சேர்ந்தால் ஒரு பெண் அம்மாதத்தில் கருத்தரிக்கும் பொழுது அந்த குழந்தையை பங்குனி மாதம் பெற்றெடுப்பாள்.அம்மாதாம் கோடைகாலம் ஆகும்.குழந்தைகள் உஷ்ணம் தாங்கமுடியாமல் அதிகளவு கஷ்டத்திற்கு உள்ளாகும்.இந்த காரணங்களுக்காகவும் ஆடி மாதத்தில் புதிதாக திருமணமானவர்களளை ஒன்றுசேர விடமாட்டார்கள்.

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் பொதுவாக சுட்டித்தனமான காணப்படுவார்கள்.அதேபோல் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் தன்மை இக்குழந்தைகளில் காணப்படும். இவர்கள் முடிவுகள் உடனடியாக எடுப்பது போல இருக்கும்.ஆனால்,அது சரியான முடிவாகவே காணப்படும். அதேபோல் ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் உடல் உஷ்ணம் உடலாகவே காணப்படும்.அதனால் அதிக அளவு அம்மை போன்றவை ஏற்படும்.

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் ஏதேனும் பெரிய முடிவுகள் எடுக்குமாயின் குடும்பத்துடன் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து செயல்பட்டால் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் பெற்றவர்களின் சொல்பேச்சு சிறிதும் கூட கேட்க மாட்டார்கள் என மூதாதையர்கள் கூறுவர்.ஆனால் அது உண்மையான காரணம் அது அல்ல.ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் படிப்பு பெற்றோர்களை விடவும் அதிகமாக காணப்படும்.இதனால் அக்குழந்தைகள் பெற்றோர்களை விட ஆராய்ந்து முடிவு எடுப்பதில் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். இம்மாதத்தில் குழந்தைகள் பிறந்தாலும் நல்ல பண்பு சொல்லிக்கொடுத்து வளர்க்கும் பொழுது இந்த சமுதாயத்தில் குழந்தை சிறப்பாகவே காணப்படும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.