சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி! எஸ் வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்!!

0
234
#image_title
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி! எஸ் வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்!
இன்று அதாவது மே 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதமன்றத்தின் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா அவர்கள் இன்று ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் 1962ல் பிறந்த எஸ் வைத்தியநாதன் அவர்கள் சென்னையில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். பின்னர் 2015ம் ஆண்டு ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதற்கு மத்தியில் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு தலைமை நீதிபதியை நியமிக்கும் வரை நீதிபதி எஸ் வைத்தியநாதன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. எஸ். வைத்தியநாதன் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
Previous articleபுதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு!!
Next articleஇறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!!