கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! கடும் சீற்றத்தில் சீமான்!

Photo of author

By Sakthi

திருச்சி கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டிய வழக்கு ஒன்றில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். திருச்சியைச் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தும் சாட்டை துரைமுருகன் இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியில் இருந்து வருகின்றார்.

கார் உதிரிபாக கடை வைத்திருக்கும் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தவறாக பேசி விட்டதாக தெரிவித்து துரைமுருகன் கார் உதிரிபாக கடைக்காரரை அவருடைய கடைக்குச் சென்று மிரட்டி இருக்கின்றார்.

இதுதொடர்பாக அந்தக் கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் உள்ளிட்ட 4 பேரும் திருச்சி கே கே நகர் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அதோடு மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். நான்கு பேர் கைது செய்யப்பட்டு தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.