சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு!

0
277
Sabarimala Ayyappan temple is closed for the first time today! Reopening date release!
Sabarimala Ayyappan temple is closed for the first time today! Reopening date release!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதன் தான் காரணமாக எந்த கோயில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.

இங்கு ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம் மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து அதிகளவு பக்தர்கள் சாமி  தரிசனம் செய்ய வரத் தொடங்கினார்கள். அதனை தொடர்ந்து 17ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்கு பக்தர்கள் வருவதன் காரணமாக ஆங்காங்கே சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்ததால் பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைவருக்கும் தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டது. மேலும் நேற்று இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உள்ள நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்கும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Previous articleஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next articleதொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! பீதி அடையும் மக்கள்!