சபரிமலை மண்டல சீசன்: கோவில் ஐதீகங்கள் மீதான சர்ச்சை.. கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகள்!!

Photo of author

By Rupa

சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் கோடிக்கணக்கான பக்தர்களின் புனித யாத்திரை முக்கியமானதாகும்.
அய்யப்பன் கோவில் அலங்காரத்தில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஆர்கிட் வகை வண்ணப்பூக்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைகள் எழுந்தன. நீண்ட நேரம் வாடாமல் இருக்கும் காரணத்தால், இந்த பூக்களை அலங்காரத்தில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இதனை அய்யப்பன் கோவிலின் ஐதீக வழிமுறைக்கு எதிரானது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு, கோவில் அலங்காரத்திற்கு சமய விதிமுறைகளுக்கு ஏற்ப தகுந்த பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இப்பதிவு, கோவிலின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் உணவு தரம்:
பக்தர்களுக்கு வழங்கப்படும் அப்பம் மற்றும் அரவணையின் தரத்தை கண்காணிக்க மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இது உணவு தரம் குறித்து எழுந்த சந்தேகங்களை தீர்க்கும் நோக்கத்தோடு நடந்தது.
சபரிமலை யாத்திரையின் போது, மரக்கிளை விழுந்து கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர் சஞ்சு படுகாயம் அடைந்தது பக்தர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவர் தற்பொழுது கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை குறித்து கோட்டயம் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பம்பை ஹில்டாப் பகுதியில் கேரள அரசுப் பேருந்துகள் ஒரே சமயத்தில் பத்துக்கும் மேல் நிறுத்தப்படக் கூடாது என்று சபரிமலை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மேலும், பக்தர்களின் கார்களை 24 மணி நேரத்துக்கு அதிகமாக பார்க்கிங்கில் நிறுத்த அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற போலீசர்கள் நியமிக்கப்பட்டனர். பணியை நிறைவு செய்த போலீசர்கள் 18 படிகளில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை ஐதீக முறைக்கு எதிரானது என பல அமைப்புகள் கண்டித்தன.

இதற்கிடையில், காவல்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ள நிலையில், கேரள உயர்நீதிமன்றம் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில டி.ஜி.பி மற்றும் உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.