National, Religion

சூரிய கிரகணம் அன்று சபரிமலை நடை சாத்தப்படும்?

Photo of author

By CineDesk

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட இருக்கிறது.

நடை திறந்த முதல் நாளில் இருந்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வருகிற 27-ந்தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு நாள் நெருங்குவதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால் சபரிமலை கோவில் நடை அன்று 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.

26-ந்தேதி அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருக்கும். தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விசே‌ஷ தீபாராதனை காட்டப்படும். மறுநாள் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறும்.

சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்?

சென்னை பல்கலை கழக மாணவர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவு?

Leave a Comment