19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனை வீரர்கள் வந்தாலும், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் நம்ம சச்சின் டெண்டுல்காருக்கேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு அவர் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கு கிரிக்கெட்டில் அவருடைய அதிரடி ஆட்டமும், அசைக்க முடியாத சாதனைகளும் தான் முக்கிய காரணமாகும்.
மும்பையை சேர்ந்தவரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாடும் போது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார், அந்த வகையில் இவர் இவ்வாறு புரிந்த பல சாதனைகளில் ஒன்றை 19 வருடத்திற்கு முன்பு இதே தேதியில் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு இண்டோர் நகரத்திலுள்ள மைதானத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணியின் சார்பாக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய ஒருநாள் போட்டியில், கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த முதல் வீரரென்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நாளில் அவர் இந்த சாதனையை புரிய இவருக்கு 259 போட்டிகள் தேவைப்பட்டது.
இதனையடுத்து இந்த சாதனையை தற்போது 205 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி நிகழ்த்தியுள்ளார். கடந்த 2018 ஆம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி சச்சினின் சாதனையை கடந்து முறியடித்துள்ளார். இந்நாள் வரை உலகளவில் வெறும் 14 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10000 ரன்களை கடந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.