ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்
அவரைசந்திக்கஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்.

இதுதொடர்பாக வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது அன்றைய தினம் காப்பி கொண்டு கொண்டு வந்து கொடுத்த அந்த ஓட்டல் ஊழியர் என்னிடம் கிரிக்கெட் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினாள் நானும் சரி என்றேன் நீங்கள் தற்போது பயன்படுத்தும் முறை உங்களது பேட்டிங் தன்மை சற்று மாற்றுகிறது.
பலமுறை டிவியில் உங்களது பேட்டிங்கை கவனித்து தான் இதை சொல்கிறேன் என்று சொன்னால் அதற்கு நான் இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் இந்த குறைபாட்டை கண்டுபிடித்து விட்டீர்கள் என்று கூறி வியந்து அதன் பிறகு தடுப்பு நடவடிக்கையை சரியான அளவுக்கு மாற்றிக் கொண்டேன் என்று கூறியுள்ளார், அவர் சொன்ன ஆலோசனைப்படி முழங்கையில் நான் அணியும் தடுப்பு கையைப் பற்றிக் கூறிய ஆலோசனைக்குப் பிறகு அதன் வடிவமைப்பு மாற்றம் செய்துகொண்டு இப்போது அந்த ஊழியரை சந்திக்க ஆசைப்படுகிறேன் கண்டுபிடிக்க நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் என்று அந்த வீடியோ பதிவிலும் கேட்டுக்கொண்டுள்ளார்.