இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் IML டி20 தொடர் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
அதன்படி, இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.
அடுத்த மூன்று அணிகள் எது என்பது இதுவரை உறுதியாக வில்லை. இந்த போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த 4 அணிகளுக்கான போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறுகிறது.
இதனால் இந்திய அணியுடன் மோத போகும் அணி எது? என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கான முதல் அரை இறுதி போட்டி வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.