ஒரு உறவிற்கு அன்பு மட்டும் ஆணிவேர் இல்லை.தியாகம்,பொறுமை,விட்டுக்கொடுத்து போதல் உள்ளிட்டவைகளும் அந்த உறவிற்கு ஆணிவேராகும்.ஆனால் இன்றைய காலத்தில் இதுபோன்ற பிணைப்பு கொண்ட உறவை பார்ப்பது என்பது அரிதாக உள்ளது.
இன்று பல வருடங்கள் நேசித்த உறவு கூட ஈகோ,சந்தேகம்,பொறாமை போன்றவற்றால் சிதைந்து போய்விடுகிறது.உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் மனக் கசப்பு ஏற்பட்டு பிரிவது அதிகரித்து வருகிறது.கடந்த 20,30 ஆண்டுகளைவிட தற்பொழுது விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது.
திருமணமாகி சில காலங்கள் நகரும் பொழுது பக்குவம் வரும் என்பது மறைந்து கருத்து வேறுபாடு வருவது வாடிக்கையாகிவிட்டது.உறவில் சகிப்புத் தன்மை இல்லாததே பிரிவிற்கு காரணமாக இருக்கிறது.சில விஷயங்களை தியாகம் செய்தால் நம் காதல் உறவு வலுப்படும் என்றால் நிச்சயம் அதை செய்யலாம்.
வாழ்க்கை துணைக்காக செய்ய வேண்டிய தியாகங்கள்:
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும்.உங்கள் நேரத்தை உங்களின் வாழ்க்கை துணைக்காக தியாகம் செய்வதில் தப்பில்லை.
உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து பணம் மற்றும் உங்களின் தேவைக்கான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டே இருக்க கூடாது.நீங்களும் அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கை துணை விரும்பும் விஷயங்களை வாங்கி கொடுக்கலாம்.உங்களது வாழ்க்கை துணைக்கு பணம் செலவழிப்பதில் கணக்கு பார்க்கக் கூடாது.இருவரும் சேர்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.இன்று பலரது உறவு முறிய பணம் தான் அடைப்படை காரணமாக இருக்கிறது.அப்படி இருக்கையில் இருவரும் பணத்தை பகிர்ந்து உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம்.
உறவில் சுயநலம் என்பது இருக்கக் கூடாது.எதையும் மனம்விட்டு பேச வேண்டும்.சண்டை ஏற்பட்டாலும் மன்னிப்பு கேட்டு பேசிவிட வேண்டும்.சின்ன ஈகோவால் ஆழமான அன்பு கொண்ட உறவுகள் கூட பிரிந்துவிடும் காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உங்கள் துணை சண்டை,கோபம் போன்றவற்றை உங்களிடம் காட்டினால் நீங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.உங்கள் துணைக்கு பிடித்தவற்றை செய்து சண்டையை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.இதுபோன்ற தியாகங்கள் மூலம் உங்கள் உறவை வலுப்படுத்தலாம்.