அரியர் மாணவர்களுக்கு வந்த சோகச் செய்தி !! ஏஐசிடிஇ எடுத்த அதிரடி முடிவு
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குயதை ஏற்க முடியாது என்றும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தை பறிக்கப்படும் என ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து செய்ததற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தற்போது வெளியானது. தமிழக அரசு தற்போது உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து,அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் பயின்ற அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால், தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு கல்லூரிகளுக்கு தலைமையான கருதப்படும் ஏஐசிடிஇ ,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதாகவும், அதில் தமிழக அரசு கூறிய அனைத்து தேர்ச்சியும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இதற்கு எதிராக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ,அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூராப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ தற்போது திணித்து வருவதாகவும் , ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்புகளுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியர் தேர்வுகளுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என்று ஆகஸ்ட் 30-ம் தேதி ஏஐசிடிஇ ,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக கூறியுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு பொறியியல் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வைத்தது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. மேலும் அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்க இயலாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி அண்ணா பல்கலைக்கழகம், ஏஐசிடிஇ-க்கு எதிராக முடிவெடுத்தால் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தை பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த கடிதம் அரியர் மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் மாணவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.