தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்!

0
102
Sagittarius – Today's Horoscope!! A day of excitement!
Sagittarius – Today's Horoscope!! A day of excitement!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள். குடும்ப உறவு சில சங்கடங்களை உருவாக்கும் என்பதால் நீங்கள் கொஞ்சம் அனுசரிச்சு போக வேண்டியது அவசியம்.

கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் வரக்கூடும் விட்டுக் கொடுத்து இருப்பதால் பிரச்சனை வராமல் தடுக்கலாம். பொருளாதாரம் இன்றைக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக தான் இருக்கும். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் இன்றைக்கு கடுமையான போட்டி இருக்கும் ஆகையால் சக வியாபாரிகள் அனுசரித்துப் போவது மிக நன்று. அரசியலில் இருக்கும் அன்பர்கள் பேசும் வார்த்தையில் கவனமாக இருப்பது அவசியம். கலைத் துறைகளில் இருக்கும் அன்பர்கள் எடுத்த காரியங்கள் சற்று இழுபறி ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீன் அலைச்சல் வந்து சேரும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். இன்றைய தினம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாட்டில் அவசியம் காண்பது நல்லது. மாணவ மாணவிகள் இடையே ஒரு மந்த நிலை உருவாகலாம்.

மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.இன்றைய தினம் உங்கள் அதிஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணிங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்

author avatar
CineDesk