தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

Photo of author

By CineDesk

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு பக்கபலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. உபயோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலை துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயது சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவமான யுனானி ,ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகளை கையில் எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்