தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
79
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

 தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் பரபரப்புடன் செயல்படுவீர்கள். நிதி அருமையாக வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை அதி அற்புதமாக உள்ளது. இன்னும் சூப்பர் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பக உங்கள் ஆற்றல் அருமையாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் புத்துணர்ச்சியோடு காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வழியில் சில முக்கிய முன்னேற்பாடுகளை பார்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்து வந்த இடையூறுகள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani