தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உண்டாகும் நாள்!

0
205
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உண்டாகும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உண்டாகும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே அற்புதமான சூழ்நிலைகள் நிலவும்.

வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் சில நேரங்களில் சில பயணங்கள் உருவாக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண ஒப்பந்தங்கள் உண்டாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிரடி திட்டங்களை தீட்டுவார்கள். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு திடீரென வெளியூர் பிரயாணம் உண்டாகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்களால் மகிழ்ச்சி அடையும் நாள்!
Next articleமூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here