தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!
தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். குடும்ப உறவு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை தருவார்கள்.
வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை புதுவிதமாக சிலர் திட்டங்களை தீட்டுவீர்கள்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்பு உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை அகழும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு எடுத்த காரியங்கள் இனிதே நிறைவேறும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.