தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

0
298
#image_title

தனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் நாள். சந்திர பகவான் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் கண்டிப்பாக இன்றைக்கு உங்களுக்கு சில பாக்கியமான நிகழ்வுகள் நடைபெறும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் நீங்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எல்லா விதத்திலும் முன்னேற்றம் இன்றைய தினம் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல்
Next articleமகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here