மகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

0
215
#image_title

மகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். சந்திர பகவான் உங்களுடைய அஷ்டம ராசியில் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

குடும்ப உறவு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். கணவன் மனைவியிடையே சில அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியுடன் செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இழுபறிகிறது என்ற கவலையுடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் ரசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.