தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

0
100
#image_title

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முயற்சிகள் வெற்றி அடையும் நாள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதால் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஒவ்வொரு விஷயங்களில் நுணுக்கத்தை கையாளுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு முயற்சிகள் வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani