விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!!

0
96
#image_title

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும் நாள். சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சிறிதுர பயணம் ஒன்று ஏற்படும் அதன் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை நன்றாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் சிலருக்கு பணியிடமாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் கல்வியில் அருமையாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் சிறுதூர பயணங்களை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயணங்கள் மூலம் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

 

 

author avatar
Selvarani