தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள். இரண்டு நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் விலகி தெளிவாக காணப்படுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கூட்டாளிகள் உங்களுக்கு அனுபவமிக்க ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குறைகள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.