தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! சிந்தனை மேலோங்கும் நாள்!

Photo of author

By CineDesk

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! சிந்தனை மேலோங்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு இடம் மாற்றும் சிந்தனை மேலோங்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை. கணவன் மனைவியிடையே இன்று புரிதல் உணர்வுகள் மேம்படும்.

வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும் என்றாலும் செலவுகளும் அணிவகுத்து நிற்கும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு இருக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் வெளியூருக்கு சென்று தங்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மனக்குழப்பம் வரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் இல்லத்தில் மங்கல காரியம் நடைபெற இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் இடமாற்று சிந்தனையில் இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர்பார்க்கும் வெளியூர் பயணம் தித்திப்பாக அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் நன்மை தரும் நாளாக உங்களுக்கு அமையும்