சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா?

Photo of author

By Jeevitha

சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா?

நடிகை சாய் பல்லவி தமிழ், மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி,போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.கார்கி திரைப்படம் தான் இவர் தமிழில் கடைசியாக நடித்து வெளியான திரைப்படமாகும். இவர் தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள எஸ்கே 21 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாய்பல்லவிக்கு ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டது அமீர்கான் மகனுக்கு ஜோடியாக தற்பொழுது ஒரு ஹிந்தி திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் ஹிந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் “ராமாயணம்” திரைப்படமானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருக்கிறது.இந்த திரைப்படத்தில் ராமனாக “ரன்பீர் கபூர்” அவர்களும் சீதையாக “சாய்பல்லவி” நடிக்க உள்ளதாகவும். மேலும் இப்படத்தின் முக்கிய காப்பாத்திரத்தில் கே.ஜே.எஃப் திரைப்படத்தின் ஹீரோ “யாஸ்” நடிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது.