பயோபிக்கில் நடிக்க கையெழுத்து கேட்டார் சாய் பல்லவி!! ராஜ்குமார் பெரியசாமி

Photo of author

By Gayathri

பயோபிக்கில் நடிக்க கையெழுத்து கேட்டார் சாய் பல்லவி!! ராஜ்குமார் பெரியசாமி

Gayathri

Sai Pallavi asked to sign biopic!! Rajkumar Periasamy

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அமரன். இப்படம் மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்துவின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் இந்துவின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒத்துக்கொள்ளவில்லை.

இயக்குனர் சாய்பல்லவி இடம் நீங்கள் ஒரு முறை நேரில் சென்று இந்துவை சந்தித்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அவரை சாய்பல்லவி சந்தித்தவுடன் இப்படத்தில் நான் தாராளமாக நடிக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார் சாய்பல்லவி.

பொதுவாக, ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை படமாக்கும் பொழுது அவருடன் இருக்கும் துணை நடிகரின் காட்சிகளை வெட்டி விடுவதுண்டு. அவ்வாறு என்னுடைய காட்சிகளை வெட்டாமல் இருக்கிறேன் என கையெழுத்திட்டால் மட்டுமே நான் இப்படத்தில் நடிப்பேன் என்றும் சாய் பல்லவி கூறியிருக்கிறார்.

அதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.