சாய் பல்லவி சியார்சியா நாட்டில் படித்ததன் மூலமாக சியார்சிய மொழியிலும், மேலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வல்லமை பெற்றவர். முதல் படமான பிரேமம் படத்திலேயே தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கடைசியாக இவர் நடித்த அமரன் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் தன் நடிப்புக்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
இவர் “அமரன் படத்தில் ‘இந்து ரெபேக்கா வர்க்கீஸ்’ என்ற வேடத்தில் அழகான நடிப்பையும், கணவர் இறக்கும் தருவாயிலும் அவர் மீது இருந்த காதலை கண்களிலே அழகாக பிரதிபலித்து இருப்பார்”. இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இப்படத்தில், “சிவகார்த்திகேயனும் அவர் உடம்பை வற்புறுத்தி பல கஷ்டங்கள் பட்டிருப்பது” குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து தற்போது, சாய் பல்லவி “பாலிவுட்டில் ‘நிதீஷ் திவாரி’ இயக்கத்தில் ராமாயணம் படம் நடித்து வருகிறார்”. ஹிந்தி நடிகர் ‘ரன்வீர் கபூர் ராமனாகவும்’, ‘கன்னட நடிகர் யாஷ் ராவணனாகவும்’ முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ‘சீதை’ கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காக சாய் பல்லவி படம் முடியும் வரை ‘அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது’ என முடிவு செய்துள்ளார். இதனால் ‘ஹோட்டலில் கூட சாப்பிடாமல் தனக்கு சமைக்க, தனக்கென்று சமையல்காரர்களை தன்னுடனே சூட்டிங் ஸ்பார்ட்டிற்கும் அழைத்துச் செல்கிறார்’. நடிப்பு என்று பாராமல் அக்கேரக்டராக வாழ்வதனால் தான் இவரால் இவ்வளவு அழகாக நடிப்பை வெளிப்படுத்த முடிகின்றது.