விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியான “உங்களில் யார் பிரபுதேவா?” நிகழ்ச்சியின் மூலம் திரையுலகத்திற்கு முன்னேறிய பிரபல நடிகை சாய் பல்லவி.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் ஏற்பட்ட ஆர்வத்தினால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
ரசிகர்களின் கனவு கன்னியாக சாய் பல்லவி இந்த கொரோனா தாக்கத்தினால் முககவசம் அணிந்த படி ரொம்ப சிம்பிளாக திருச்சி MAM கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார்.
அவரைப் பார்த்த ரசிகர்கள் சாய்பல்லவி சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க தொடங்கிவிட்டனர். அவர்களுடன் இன்முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் சாய்பல்லவி.
வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் இந்தியாவில் தங்களது மருத்துவ பயிற்சியை தொடங்குவதற்காக FMGEஇந்தத் தேர்வை எழுத வேண்டும். அதற்கு சாய் பல்லவி சாய்பல்லவி திருச்சி வந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.