புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!!

0
29
#image_title

புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் ஏற்கனவே நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சலார் திரைப்படத்தில் நடிகர்கள் பிருத்திவிராஜ், ஜகபதி பாபு, ஸ்ருதிஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கேஜிஎப் திரைப்படங்களுக்கு இசையமைத்த ரவி பாஸ்ரர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

கேஜிஎப் திரைப்படங்களில் நடித்த நடிகர் யாஷ் அவர்கள் இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் கேஜிஎப் திரைப்படத்திற்கும் சலார் திரைப்படத்திற்கும் தொடர்பு உள்ளது போல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.

அதாவது தமிழில் இயக்குநர் மகேஷ் கனகராஜ் அவர்கள் கைதி மற்றும் விக்ரம் இரண்டு திரைப்படத்தையும் இணைத்து எடுத்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்டை கொண்டு வந்தது போலவே இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்களும் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்களை சலார் திரைப்படத்துடன் இணைத்து பிரசாந்த் நீல் யுனிவர்ஸ் என்ற ஒன்றை கொண்டுவரவுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சலார் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி சலார் திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 22ம் தேதி நடிகர் ஷாரூக்கான் நடித்து வரும் டங்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதே போல டிசம்பர் 15ம் தேதி நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஹிந்தியில் நடிகர் ஷாரூக்கான் நடித்த திரைப்படம், தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்த திரைப்படம், தமிழில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் என்று மூன்று பெரிய திரைப்படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.